மாநில செய்திகள்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு- 21 காளைகளை பிடித்த கார்த்திக் முதலிடம் + "||" + Alankanallur Jallikkattu Competition Completed

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு- 21 காளைகளை பிடித்த கார்த்திக் முதலிடம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு- 21 காளைகளை பிடித்த கார்த்திக் முதலிடம்
21 காளைகளை பிடித்த கருபாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்தார்.
மதுரை,

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பொங்கலையொட்டி கடந்த 14-ந் தேதி அவனியாபுரத்திலும், நேற்று முன்தினம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்ததால் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, இன்று (திங்கட்கிழமை) அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  

விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில்  8 சுற்றுகளில் 1020 காளகள் அவிழ்த்து விடப்பட்டன.  இதில் 21 காளைகளை பிடித்த கருபாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.  சித்தாலங்குடி கோபால கிருஷ்ணன் 13 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார். 18 காளைகளை பிடித்த அலங்கா நல்லூரை சேர்ந்த ராம்குமார் 2 ஆம் இடம் பிடித்தார்.