காஞ்சீபுரம்: ஊரடங்கில் விதிமீறிய 598 பேர் மீது வழக்கு


காஞ்சீபுரம்:  ஊரடங்கில் விதிமீறிய 598 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Jan 2022 9:15 PM GMT (Updated: 17 Jan 2022 9:15 PM GMT)

காஞ்சீபுரத்தில் முழு ஊரடங்கில் விதிமீறிய 598 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


காஞ்சீபுரம்,



தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  ஊரடங்கு உத்தரவை முறையாக கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 1,100க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தேவையில்லாமல் சாலையில் திரிந்தவர்களை பிடித்து எச்சரித்தனர். மேலும் விதிமுறை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமீறி சாலையில் சுற்றி திரிந்த 598 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.


Next Story