கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் மரபணு மாறுபாடு..! கண்டுபிடித்த சுவீடன் விஞ்ஞானிகள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Jan 2022 10:28 PM GMT (Updated: 2022-01-18T03:58:14+05:30)

கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் மரபணு மாறுபாட்டை சுவீடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன், 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கும் குறிப்பிட்ட ஒரு மரபணு மாறுபாட்டை சுவீடன் கரோலின்ஸ்கா நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை அவர்கள் நேச்சர் ஜெனெடிக்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். கொரோனாவால் நாம் கடுமையாக பாதிக்கப்படுகிறோமா அல்லது லேசான நோயால் பாதிக்கப்படுகிறோமா என்பதில் மரபணுக்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மரபணு மாறுபாடு, கொரோனா தொற்றுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைக்கான இலக்காக செயல்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

‘ஆர்எஸ்10774671-ஜி’ என்னும் இந்த பாதுகாப்பு மரபணு மாறுபாடு, மரபணுவால் குறியிடப்பட்ட புரதத்தின் நீளத்தை தீர்மானிக்கிறது; கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ்-கோவ்-2 வைரசை உடைப்பதில் புரதத்தின் நீண்ட மாறுபாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் காட்டின. 

கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்துகளை உருவாக்குவதற்கு மரபணு ஆபத்து காரணிகளை நாங்கள் விரிவாக புரிந்துகொள்ள தொடங்குகிறோம் என்று விஞ்ஞானிகளில் ஒருவரான கனடா மெக்கில் பல்கலைக்கழக பேராசிரியர் பிரெண்ட் ரிச்சர்ட்ஸ் கூறி உள்ளார்.

Next Story