கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை


கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2022 10:34 PM GMT (Updated: 2022-01-18T04:04:18+05:30)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனையில் கொரோனா நோயாளி விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உளளது.

சென்னை,
 

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் உதவி மேலாளராக கேரளாவை சேர்ந்த சந்தீப் (வயது 29) என்பவர் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். 

அவர் சில நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அந்த மருத்துவமனையின் 2வது தளத்தில் உள்ள வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சந்தீப், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சந்தீப்புக்கு சிகிச்சை அளிக்க செவிலியா்கள், அவா் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு நேற்று சென்றனா். அப்போது அங்கு சந்தீப், தனது இடது கையில் ஊசியை செலுத்திய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.  இதனை பாா்த்து அவர்கள் அதிா்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த மருத்துவமனை நிா்வாகம், காவல்துறைக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.  மேலும் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story