தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவு


தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவு
x
தினத்தந்தி 19 Jan 2022 5:06 AM GMT (Updated: 19 Jan 2022 12:43 PM GMT)

அலுவலகங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் :தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

சென்னை 

பணிபுரியும் போது மாஸ்க் அணியாதவர்களை உடனடியாக  வெளியேற்ற வேண்டும். பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு உள்லது தமிழக சுகாதாரத்துறை  அதன் விவரம் வருமாறு :-

அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும்.


ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்திட தேவையான சூப்பர்வைசர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்கவேண்டும். பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும்.

பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.


Next Story