மாநில செய்திகள்

புதிய காவல் ஆணையம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு + "||" + New Police Commission - Order of the Cheif Minister MK Stalin

புதிய காவல் ஆணையம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

புதிய காவல் ஆணையம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தர
சென்னை,

ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆணையத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அலாவுதீன் மற்றும் ராதாகிருஷ்ணன், மருத்துவர் ராமசுப்பிரமணியம், பேராசிரியர் நளினிராவ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆணையர் உறுப்பினர் செயலராக காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான புதிய பயிற்சி முயற்சிகளை இந்த புதிய காவல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இந்த ஆணையம் பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.