விடுதியில் வேலை செய்ய கூறியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை


விடுதியில் வேலை செய்ய கூறியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2022 8:06 PM GMT (Updated: 2022-01-20T01:36:52+05:30)

விடுதியில் வேலை செய்ய கூறியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை பெண் வார்டன் கைது.

தஞ்சாவூர்,

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மாணவி லாவண்யா சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் ஆஸ்பத்திரியில் மாணவி லாவண்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, விடுதியில் தன்னை வேலை செய்யுமாறு கூறியதால் தான் மனம் உடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story