ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்


Image Courtesy: INDIA TV
x
Image Courtesy: INDIA TV
தினத்தந்தி 20 Jan 2022 4:29 AM GMT (Updated: 2022-01-20T10:02:29+05:30)

ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.

தங்கச்சிமடம்,

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல் மீனவர்களின் ஒரு விசைப்படகு மீது மோதியது. இதில், மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனால், விசைப்படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கடலில் குதித்து தத்தளித்தனர்.

விசைப்படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் அந்த பகுதியில் இருந்து நகர்ந்து சென்றது. இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் விழுந்து தத்தளித்த 7 மீனவர்களையும் அப்பகுதியில் மீன்படித்துக்கொண்டிருந்த சக ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டனர்.

மீட்கபட்ட 7 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டதனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story