கள் விற்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு


கள் விற்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு
x
தினத்தந்தி 20 Jan 2022 6:54 PM GMT (Updated: 20 Jan 2022 6:54 PM GMT)

கள் விற்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு தடையை நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் கள் இறக்குவதற்கான தடையை நீக்கி, கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கள் உற்பத்தியை கள்ளச்சாராயத்தோடு தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதோடு, கள் இறக்கும் பனையேறிகள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும், எரிசாராயம் வைத்திருந்ததாகவும் பொய் வழக்குகள் பதியப்படும் நிலையில் கள் உணவுப்பொருள் தானேயொழிய போதைப்பொருள் அல்ல, ஆதலால் கள்ளினைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதனை உணர்த்தும் விதத்தில் இப்போராட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

தமிழ்நாட்டில் நிலவும் கள் இறக்குவதற்கான தடையை நீக்கும் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்த நிலையில், தமிழ்நாடு கள் இயக்கம் முன்னெடுக்கின்ற கள் இறக்கி விற்கும் போராட்டத்தினை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். காலங்கடத்தாமல் கள் இறக்குவதற்கான தடையை நீக்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story