செல்போனில் படம் பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போனில் படம் பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2022 7:02 PM GMT (Updated: 2022-01-21T00:32:25+05:30)

செல்போனில் படம் பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

செங்குன்றம்,

செங்குன்றம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. கணவரை இழந்த இவர், செங்குன்றத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகன் லோகேஸ்வரன்(வயது 12). இவன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டுக்கு வந்து இருந்தான்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று காலை லோகேஸ்வரன், வீட்டில் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்தான். இதனை அவனது தாயார் அமுதவல்லி கண்டித்தார். பின்னர் அவர், வேலைக்கு சென்று விட்டார்.

தாய் திட்டியதால் விரக்தி அடைந்த லோகேஸ்வரன், வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த அமுதவல்லி, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story