கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு : 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு


கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு : 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Jan 2022 5:05 AM GMT (Updated: 21 Jan 2022 5:05 AM GMT)

கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளன.

கோவை:

கோவை செட்டிபாளையத்தில் கோவை மாவட்டம் நிர்வாகம் கண்காணிப்பில் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் சமீரன் இருந்தார்.

முதல் காளையாக சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

மாடுகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும், அங்கு வரக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டிருந்தார்.அதன் படி சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று மாலை முதலே வெளியூர்களில் இருந்து காளைகள் வர துவங்கியது. தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

ஜல்லிக்கட்டு போட்டி தொலைகாட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் பகுதியில், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story