திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பக்தர்களுக்கு தடை


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பக்தர்களுக்கு  தடை
x
தினத்தந்தி 21 Jan 2022 7:50 AM GMT (Updated: 2022-01-21T13:20:06+05:30)

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை:

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. 

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களும் பிரதி வாரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று முதல் நாளை மறுநாள் (23-ந் தேதி) வரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் இன்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story