தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு..!


தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு..!
x
தினத்தந்தி 21 Jan 2022 2:28 PM GMT (Updated: 21 Jan 2022 2:28 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 54 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 29 ஆயிரத்து 870 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,038 பேரும், கோவையில் 3,653 பேரும், செங்கல்பட்டில் 2,250 பேரும், கன்னியாகுமரியில் 1,248 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 87 ஆயிரத்து 358 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு தமிழகத்தில் இன்று 33 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 145 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 21 ஆயிரத்து 384 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 28 லட்சத்து 48 ஆயிரத்து 163 பேர் குணம் அடைந்து உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story