மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திய அ.தி.மு.க. பிரமுகர் திடீர் சாவு + "||" + A.D.M.K., who was vaccinated against corona. Sudden death of a person

கொரோனா தடுப்பூசி செலுத்திய அ.தி.மு.க. பிரமுகர் திடீர் சாவு

கொரோனா தடுப்பூசி செலுத்திய அ.தி.மு.க. பிரமுகர் திடீர் சாவு
கொரோனா தடுப்பூசி செலுத்திய அ.தி.மு.க. பிரமுகர் திடீர் சாவு.
மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஜகநாதபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 51). அ.தி.மு.க கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம் கழிக்குப்பத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்தநிலையில் அன்று இரவு 7 மணியளவில் வேலாயுதத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை, அவரது குடும்பத்தினர் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே வேலாயுதம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், வேலாயுதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பணியின்போது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
2. சென்னையில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பா.ம.க. நிர்வாகி சாவு
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பா.ம.க நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
3. தம்பி தற்கொலை செய்த விரக்தியில் அண்ணனும் தூக்குப்போட்டு சாவு
தம்பி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் அண்ணனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
4. போதையில் கீழே விழுந்தபோது இடுப்பில் சொருகிய மதுபாட்டில் குத்தி தொழிலாளி சாவு
போதையில் கீழே விழுந்தபோது இடுப்பில் வைத்திருந்த மது பாட்டில் உடைந்து குத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர், மனைவி மீது வழக்கு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்பதில் போட்டா போட்டி: பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர், மனைவி மீது வழக்கு.