சென்னையில் 28 பூங்கா திட்டப் பணிகளுக்கு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு


சென்னையில் 28 பூங்கா திட்டப் பணிகளுக்கு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 22 Jan 2022 10:33 AM GMT (Updated: 2022-01-22T16:03:34+05:30)

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 28 புதிய பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், 23 பூங்காக்கள் ரூ 18.48 கோடி மதிப்பீட்டிலும், 5 பூங்காக்கள் ரூ 5.95 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட உள்ளன. 28 பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணியாணை வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story