மாநில செய்திகள்

நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது + "||" + Police have arrested a man for stealing 21 pounds of jewelery and Rs 2 lakh from a friend's house

நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது

நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது
சென்னையில் நண்பரின் வீட்டில் 21 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, வெங்கடாச்சலம் 3-வது தெருவில் வசிப்பவர் சாரதி (வயது 28). இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீரோவில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மாயமான முறையில் திருட்டு போய்விட்டது.


பீரோ உடைக்கப்படவில்லை. சாரதியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூரும் போகவில்லை. இந்த நிலையில் பீரோவில் இருந்த நகைகளும், பணமும் எப்படி? திருட்டு போனது என்பது மர்மமாக இருந்தது.

இது குறித்து, ஐஸ்-அவுஸ் போலீஸ் நிலையத்தில் சாரதி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நண்பர் கைது

விசாரணையில் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச்சேர்ந்த சுமன் என்ற நண்பர் ஒருவர் சாரதியின் வீட்டுக்கு வந்து சென்றதும், அவர்தான், நைசாக சாரதி வீட்டில் திறந்து கிடந்த பீரோவில் இருந்து 21 பவுன் தங்க நகைகளையும், ரூ.2 லட்சத்தையும் திருடிச்சென்றது தெரிய வந்தது.

ஐஸ்-அவுஸ் குற்றப்பிரிவு போலீசார், சுமனை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. அவர் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும்: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்படாமல் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் பேட்டி
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்படாமல் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் தெரிவித்தார்.
2. கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்....!
காஞ்சிபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
3. திருச்சி: பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகை திருட்டு..!
திருச்சி அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
4. கடையின் பூட்டை உடைத்து திருட்டு; ராஜநடை போட்டு தப்பி சென்ற திருடன்..!
மேலூரில் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்த திருடனை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
5. தேனி: கோவிலில் சாமி சிலைகள் திருடிய வாலிபர் கைது - கூட்டாளிக்கு போலீஸ் வலைவீச்சு
தேனி அருகே கோவிலில் பூசாரியை தாக்கி சாமி சிலை மற்றும் உண்டியலை திருடி சென்ற வாலிபரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் பிடித்து சிறையில் அடைத்தனர்.