தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது - கமல்ஹாசன்


தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 24 Jan 2022 9:57 AM GMT (Updated: 24 Jan 2022 9:57 AM GMT)

தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக நாகசாமியின் பங்களிப்பு முக்கியமானது என்று பதிவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

'மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், ஆலயங்கள் குறித்து இவரெழுதிய நூல்கள் நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை. அஞ்சலிகள்' என்று கூறியுள்ளார்.

Next Story