தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...!


தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...!
x
தினத்தந்தி 24 Jan 2022 4:35 PM GMT (Updated: 24 Jan 2022 4:35 PM GMT)

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 18 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

8-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 4.74 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

45-60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1.19 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25.75 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது 

முன்களப்பணியாளர்களுக்கு 13.01 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

மருத்துவப் பணியாளர்களுக்கு 9.70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story