வாகன சோதனையின்போது தொழில் அதிபரின் காரில் ரூ.64 லட்சம் சிக்கியது


வாகன சோதனையின்போது தொழில் அதிபரின் காரில் ரூ.64 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 24 Jan 2022 6:47 PM GMT (Updated: 24 Jan 2022 6:47 PM GMT)

வாகன சோதனையின்போது தொழில் அதிபரின் காரில் ரூ.64 லட்சம் சிக்கியது.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த ஒரு பையை திறந்து பார்த்த போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ.63 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

தொழில் அதிபரிடம் விசாரணை

உடனே, போலீசார் காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் முகமது அசாருதீன் (வயது 32) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் காரில் இருந்த பணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், இடம் வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால், அதற்குரிய முறையான ஆவணங்கள் எதுவும் முகமது அசாருதீனிடம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக முகமது அசாருதீனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story