யானை தந்தங்களை விற்க முயற்சி: கைதான 3 பேருக்கு கொரோனா வனத்துறையினர் அதிர்ச்சி


யானை தந்தங்களை விற்க முயற்சி: கைதான 3 பேருக்கு கொரோனா வனத்துறையினர் அதிர்ச்சி
x

யானை தந்தங்களை விற்க முயற்சி: கைதான 3 பேருக்கு கொரோனா வனத்துறையினர் அதிர்ச்சி.

தேனி,

தேனி மாவட்டம் புல்லக்காபட்டி புறவழிச்சாலையில் சாக்குப்பையில், 2 யானை தந்தங்களுடன் நின்று கொண்டிருந்த 9 பேர் கும்பலை வனத்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். தந்தங்களை விற்பனை செய்வதற்கு முயற்சித்தபோது வனத்துறையினரிடம் அவர்கள் சிக்கினர். கைதான 9 பேரும் பெரியகுளம் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக 9 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தேவதானப்பட்டியை சேர்ந்த சின்னராசு (வயது 29), பிரகாஷ் (29), வத்தலக்குண்டுவை சேர்ந்த அப்துல்லா (34) ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து 3 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணை கைதிகள் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தகவல், வனத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் அவர்களை பிடித்த வனத்துறையினர் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story