பராமரிப்பு பணி: திருப்பதி-காட்பாடி ரெயில் வரும் 31-ந்தேதி வரை ரத்து


பராமரிப்பு பணி: திருப்பதி-காட்பாடி ரெயில் வரும் 31-ந்தேதி வரை ரத்து
x
தினத்தந்தி 24 Jan 2022 11:02 PM GMT (Updated: 2022-01-25T04:32:04+05:30)

பராமரிப்பு பணி: திருப்பதி-காட்பாடி ரெயில் வரும் 31-ந்தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* திருப்பதி-காட்பாடி பயணிகள் சிறப்பு ரெயில் (வண்டி எண்:07661), திருப்பதியில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* காட்பாடி-திருப்பதி பயணிகள் சிறப்பு ரெயில் (07662), காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் இன்று முதல் வரும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் (17238), சென்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ரெயில் வரும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் பித்திரகுண்டா-எம்.ஜி.ஆர். சென்டிரல் எக்ஸ்பிரஸ் (17237), பித்திரகுண்டாவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் வரும் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story