தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு...!


தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு...!
x
தினத்தந்தி 25 Jan 2022 8:14 AM GMT (Updated: 25 Jan 2022 8:14 AM GMT)

தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை,

தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை பெயர்த்து பீடம் பின்புறம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் வைத்தனர். இதுகுறித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என விசாரணை நடத்திவந்தனர். பின்னர் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தியதில் வடக்குவாசலை சேர்நத சேகர் என்பவர்தான் சிலையை  உடைந்தது என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

மேலும் இது தொடர்பாக சேகரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடி போதையில் சிலையை உடைத்தது தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story