மாநில செய்திகள்

முறை தவறிய காதலால் 16 வயது சிறுமி தற்கொலை + "||" + 16-year-old girl commits suicide after falling in love

முறை தவறிய காதலால் 16 வயது சிறுமி தற்கொலை

முறை தவறிய காதலால் 16 வயது சிறுமி தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே முறை தவறிய காதலால் சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு 4 பிள்ளைகள் இருந்தனர். 2-வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.

இதில் முதல் மனைவியின் 4-வது மகள் 16 வயது சிறுமி. இவரும், 2-வது மனைவியின் மகனான 16 வயது சிறுவனும் காதலித்து வந்தனர். இந்த காதல் பெற்றோர், உறவினர்களுக்கு தெரியவந்தது.

இதனால் அவர்கள் இந்த முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறுமி, சிறுவனை கண்டித்தனர். இதில் சிறுமி மன வேதனை அடைந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி அருகே முறை தவறிய காதலால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.