தமிழகத்தில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு குறைவு, உயிரிழப்பு அதிகம்....! + "||" + In Tamil Nadu today, the daily corona impact is less and the death toll is higher ....!
தமிழகத்தில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு குறைவு, உயிரிழப்பு அதிகம்....!
தமிழகத்தில் இன்று 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. ஆனால் உயிரிழப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 ஆயிரத்து 055 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 94 ஆயிரத்து 260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு தமிழகத்தில் இன்று 48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 25 ஆயிரத்து 221 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 29 லட்சத்து 45 ஆயிரத்து 678 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 6,241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3,763 பேருக்கு தொற்று, செங்கல்பட்டில் 1,737 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.