நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  எப்போது? இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 26 Jan 2022 8:55 AM GMT (Updated: 26 Jan 2022 8:55 AM GMT)

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இதே கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை நீங்கியதால், தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

 அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிகுமார் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட உள்ளார். 


Next Story