கொரோனா பரவல் தடுப்பு, ஊரடங்கு தளர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


கொரோனா பரவல் தடுப்பு, ஊரடங்கு தளர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 26 Jan 2022 10:57 PM GMT (Updated: 26 Jan 2022 10:57 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்படுவதால் அதை குறைத்து எடைபோட முடியாது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு; வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் இயங்க தடை போன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதோடு, 31-ந்தேதிவரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆலோசனை

இந்த நிலையில் தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் ஆய்வு செய்வதற்காக இன்று சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம், தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்புகளை வெளியிடுவார்.

Next Story