மாநில செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பா.ஜ.க. கண்டனம் + "||" + Reserve Bank officials did not stand up for the Tamiltai greeting song. Condemnation

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பா.ஜ.க. கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பா.ஜ.க. கண்டனம்
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அதிகாரிகள் எழுந்து நிற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை,

குடியரசு தின விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சாமி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர், சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.


அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த பத்திரிகையாளர் ஒருவர், ‘ தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுதொடர்பாக கோர்ட்டே உத்தரவு வழங்கி இருக்கிறது’ என்று கூறினார்.

‘தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்திருக்க வேண்டும்’ என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், ‘இனிமேல் பண்ணுகிறோம்’ என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

பா.ஜ.க. கண்டனம்

இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிற சிலரின் வாதம் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இது குறித்த சர்ச்சையில், எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசு நிர்வாக உத்தரவு எதுவும் இல்லை என்று உயர்நீதி மன்றம் கூறியிருந்த நிலையில், கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமே. தேவையில்லாது வாதம் புரிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டு நின்ற நிலையில் மனதார தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 25 முதல் 31-ந்தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்..!!
25 முதல் 31-ந்தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
2. கல்பாக்கம் அணுமின் நிலைய பணிக்கு இந்தியில் தேர்வு: மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கல்பாக்கம் அணுமின் நிலைய பணிக்கு இந்தியில் தேர்வு: மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
3. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- ஈரோட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
4. யூதர்கள் குறித்து சர்ச்சை கருத்து: ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்
யூதர்கள் குறித்து சர்ச்சை கருத்தினை தெரிவித்த ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐநா கண்டனம்
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.