தஞ்சை மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்


தஞ்சை மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:31 AM GMT (Updated: 2022-01-27T12:01:33+05:30)

இந்து இளைஞர் முன்னணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்:  

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா (வயது17).‌ கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். மதம் மாறும்படி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநிலம் முழுவதும் போராட்டம் நடக்கிறது.‌ இந்த நிலையில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story