கடலூர்: பழைய கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி


கடலூர்: பழைய கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள்  2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Jan 2022 8:31 AM GMT (Updated: 2022-01-27T14:30:08+05:30)

கடலூர் அருகே பழைய கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்

கடலூர்

கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது. இன்று  இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது. 

இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீரசேகர், சுதீஷ்குமார் 2 பேரும் உயிரிழந்தனர். 

வனேஸ்வரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story