பிப்.1 முதல் பள்ளி ,கல்லூரிகள் திறப்பு : தமிழக அரசு அறிவிப்பு + "||" + February 1 First School Opening, Colleges Opening: Government of Tamil Nadu Announcement
பிப்.1 முதல் பள்ளி ,கல்லூரிகள் திறப்பு : தமிழக அரசு அறிவிப்பு
பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி ,கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது .
சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும்,பள்ளிகள் திறப்பு குறித்தும் இன்று மருத்துவ நிபுணர்கள், குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி ,கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது .
பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12 வகுப்புவரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்துக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.