நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Jan 2022 11:55 PM GMT (Updated: 27 Jan 2022 11:55 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விதிகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த 1992-ம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில், நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீடு, தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்து கூறப்பட்டு இருந்தது. ஆனால், மாநகராட்சி மேயர் பதவிக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில சட்டசபையில் உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

3 மேயர்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 17-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில், சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள், எஸ்.சி. பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை. சட்டசபையில் சட்டம் இயற்றாமல், 1996-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல, நகராட்சி தலைவர் பதவிகளில் ஒரு இடம் கூட எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கவில்லை. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

சட்டவிரோதம் இல்லை

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜயேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘‘1994-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டன. எனவே, இடஒதுக்கீடு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

Next Story