பிப்ரவரி 19-ல் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2022 5:27 AM GMT (Updated: 2022-01-28T13:04:54+05:30)

பிப்ரவரி 19-ல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கபடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 19-ஆம் தேதியும் நடைபெற இருந்தது. 

தற்போது உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு, அன்று நடைபெற இருந்த தேர்வுகள் மார்ச் மாதம் தள்ளிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் மாற்றம் தொடர்பான புதிய தேர்வு அட்டவணை தற்போது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரால் வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  பிப்ரவரி 19ல் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகள் மார்ச் 5,6,9,11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.Next Story