மாநில செய்திகள்

மகனை கொலை செய்து உடலை சைக்கிளில் எடுத்து சென்ற பெற்றோர் + "||" + Parents who killed their son and took his body on a bicycle

மகனை கொலை செய்து உடலை சைக்கிளில் எடுத்து சென்ற பெற்றோர்

மகனை கொலை செய்து உடலை சைக்கிளில் எடுத்து சென்ற பெற்றோர்
மதுரை வைகை ஆற்றில் எரித்துக் கொல்லப்பட்ட மணிமாறன் உடலை சைக்கிளில் வைத்து எடுத்து சென்ற அவரது பெற்றோர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
மதுரை

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் – கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களுடைய மகன் மணிமாறன், திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அவர் வைகை கரையோரம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மணிமாறன் தினந்தோறும் மது குடித்துவிட்டு, தாய் – தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது கொடுமையை தாங்க முடியாத, முருகேசனும், கிருஷ்ணவேணியும் மணிமாறனை கட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்த பின்னர் அவரது உடலை துணியால் கட்டி சைக்கிளில் வைத்து எடுத்து சென்று வைகை நதி கரையில் தீயிட்டு எரித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாய், தந்தை இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.