17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு


17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 29 Jan 2022 12:25 PM GMT (Updated: 2022-01-29T17:55:36+05:30)

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக இருந்த குமார் தாம்பரம் சரக போக்குவரத்து துணை கமிஷனராக இடமாற்றம்.

சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி. யாக இருந்த சிபி சக்ரவர்த்தி தாம்பரம் சரக சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக இடமாற்றம்.

சென்னை, சிஐடி, சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த பா.மூர்த்தி தாம்பரம் சரக தலைமை மற்றும் நிர்வாகத்துறை துணை கமிஷனராக இடமாற்றம்.

அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ், ஆவடி சட்டம்-ஒழுங்கு காவல் துணை கமிஷனராக இடமாற்றம்.

அடையாறு காவல் துணை கமிஷனராக மகேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
Next Story