அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியது ஏன்? ஜெயக்குமார் விளக்கம்
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறியது ஏன்? என்பதற்கு ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ஜ.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சிகளுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களுடைய கட்சியின் நலனையும், கட்சியினரின் நலனையும் மிக உன்னிப்பாக கவனிக்கவேண்டியது முக்கியம். இதனால்தான் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றமுடியாத சூழ்நிலையில்தான், எங்களுடைய நிலைமையை சொன்னோம்.
அதிகப்படியான இடங்களை உங்களுக்கு தர முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கூறினோம். இதையடுத்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள். இது அவர்கள் கட்சி எடுத்த முடிவு. இதுபற்றி நான் கருத்து கூறவிரும்பவில்லை. நாங்கள் தனித்தன்மையோடு பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். அதேபோன்று இந்த தேர்தலிலும் எங்களுக்கு இருக்கும் தனித்தன்மை, அடையாளத்தோடு மாபெரும் வெற்றியை பெறுவோம்.
நிழல் பெற்றவர்கள் அதிகம்
தேர்தல் என்ற வரலாறை பார்க்கும்போது, 1977, 2016-ல் அ.தி.மு.க. தனியாகத்தான் நின்றது. அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஆலமரம் போன்றது. ஆலமரத்தின் கீழ் நின்று நிழல் பெறுபவர்கள்தான் அதிகம்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற கடந்த 8 மாத காலத்தில் அடாவடி, அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, எம்.எல். ஏ.க்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது. பொங்கல் பரிசாக ரூ.1,000 கொடுக்க வக்கில்லாத அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது. வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. எல்லா விதத்திலும் தி.மு.க. அரசு தோல்வியடைந்திருக்கிறது. தற்போது மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் அவலநிலையை எடுத்துக்கூறுவோம். எங்களுடைய சாதனைகளை எடுத்துக்கூறி மகத்தான வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story