மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் - எஸ்.பி அறிவுரை


மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் - எஸ்.பி அறிவுரை
x
தினத்தந்தி 1 Feb 2022 2:49 PM IST (Updated: 1 Feb 2022 2:49 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் விளையாட்டுகளான ப்ரீ பயர், ரம்மி போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்

தூத்துக்குடி,

ஆன்லைன் விளையாட்டில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு  கல்வி உடற்பயிற்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகளான ப்ரீ பயர், ரம்மி போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் சரி, தூத்துக்குடி மாவட்டத்திலும் சரி பல்வேறு பகுதிகளில்  பள்ளி மாணவர்கள் தங்களை அறியாமல் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி படிப்பையும், நேரத்தையும் வீணடித்து வருகின்றனர்.

மேலும் பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியில் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடி வருகின்றனர். பின்னர் கடனை திருப்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனை பெற்றோர்கள் கருத்தில் கொண்டு தங்கள் குழந்தைகளை இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

Next Story