67 வயதில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்!
கோயம்புத்தூரை சேர்ந்த 67 வயது மூதாட்டி இறந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை,
கோயம்புத்தூரைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி, கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்தார், அவர் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, அவரது பெயரில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு மெசேஜ் வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், அவர் ஜூலை 27, 2021 அன்று, முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 9 அன்று அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், முதல் டோஸ் போடுவதற்காக அந்த பெண் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு, இரண்டாவது டோஸ் போட வேண்டி சமீபத்தில் சுகாதார பணியாளர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததது. அவரிடம் குடும்ப உறுப்பினர் ஒருவர், அந்த பெண் தற்போது உயிருடன் இல்லை என்று சுகாதார பணியாளரிடம் தெரிவித்தார்.
இருப்பினும் ஜனவரி 29 அன்று, அந்த பெண்ணின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கொரானா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது என்று ஒரு மெசேஜ் வந்ததுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் கோவின் இணையதளத்தில் சென்று பார்த்தனர்.
அதில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தடுப்பூசி சான்றிதழை பார்த்த பொழுது தெலுங்குபாளையத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அவர் இரண்டாவது டோஸை போட்டு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறினர்.
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story