முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2022 6:29 PM IST (Updated: 1 Feb 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் ஆன்லைன் வழியிலான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில் முதுகலை பொறியியல் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருக்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story