மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கைதான சிறுவனுக்கு கொரோனா


மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கைதான சிறுவனுக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Feb 2022 11:54 PM IST (Updated: 1 Feb 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காரைக்கால்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

போலீசில் ஒப்படைப்பு

காரைக்கால் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியும், 17 வயது சிறுவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, தனது காதலனுடன் காரைக்கால் கடற்கரையில் சுற்றி வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மாணவியின் தந்தை தனது மகள் வேறொரு சிறுவனுடன் சுற்றுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இருவரையும் எச்சரித்த அவர், சிறுவனை பிடித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சிறுவனுக்கு கொரோனா

மேலும் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனை, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொரோனா பரிசோதனை செய்தனர். சோதனையின் முடிவில் சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Next Story