டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Feb 2022 12:16 AM IST (Updated: 2 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களுக்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. அதை எதிர்த்து, ஏற்கனவே குத்தகைக்கு எடுத்த பார் உரிமையாளர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் ஆகியோர் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story