டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 15-ந் தேதி நடக்கிறது


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 15-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 2 Feb 2022 12:21 AM IST (Updated: 2 Feb 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 15-ந் தேதி நடக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தர வரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story