டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்


டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்
x
தினத்தந்தி 2 Feb 2022 8:04 AM IST (Updated: 2 Feb 2022 8:04 AM IST)
t-max-icont-min-icon

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் தனது நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு  பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. 

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

வரும் 28-ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.


Next Story