தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மகளை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி பலி


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மகளை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 2 Feb 2022 8:38 AM IST (Updated: 2 Feb 2022 11:32 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மகளை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு

கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை நஞ்சகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 48). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (40). இவர்களுடைய மகள்கள் ஸ்ரீமதி (10), அனுஸ்ரீ (5). சம்பவத்தன்று ஸ்ரீமதிக்கு உடல்நிலை சரியில்லாததால் பழனிச்சாமி அவரை கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். வீட்டில் முத்துலட்சுமியும், அனுஸ்ரீயும் இருந்தனர். அப்போது குழந்தை அனுஸ்ரீ வீடு முன்பு விளையாடி கொண்டிருந்தாள், அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுமார் 5 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தாள்.

சத்தம் கேட்டு் வீட்டுக்குள் இருந்த முத்துலட்சுமி ஓடி வந்து பார்த்தார். பின்னர் தொட்டிக்குள் இறங்கி அனுஸ்ரீயை காப்பாற்றி வெளியே கொண்டு் வந்தார். ஆனால் முத்துலட்சுமியால் வெளியே வர இயலவில்லை. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story