சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.91 குறைப்பு


சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.91 குறைப்பு
x
தினத்தந்தி 2 Feb 2022 9:06 AM IST (Updated: 2 Feb 2022 9:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் 91 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று முதல் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளதால் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். அதேவேளை, வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story