பெரும்பாக்கம்: பஸ் புறப்பட தாமதமாவது குறித்து கேட்ட பெண் பயணி மீது டிரைவர்-கண்டக்டர் தாக்குதல்


பெரும்பாக்கம்: பஸ் புறப்பட தாமதமாவது குறித்து கேட்ட பெண் பயணி மீது டிரைவர்-கண்டக்டர் தாக்குதல்
x
தினத்தந்தி 2 Feb 2022 10:47 AM IST (Updated: 2 Feb 2022 10:47 AM IST)
t-max-icont-min-icon

பஸ் புறப்பட தாமதமானது குறித்து கேள்வி கேட்ட பெண் பயணி மீது டிரைவர் மற்றும் கண்டக்டர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகம்மா, கணவர் செந்திலுடன் பேரிஸ் செல்ல பெரும்பாக்கம்  பஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர்

அங்கு காலை 5 மணியளவில் பெரும்பாக்கத்தில் இருந்து பேரிஸ் செல்லக் வேண்டிய பஸ் 5.30 மணி ஆகியும் பஸ்யை எடுக்காமல் டிரைவர் காலதாமதம் செய்து வந்துள்ளனர். 

இதுகுறித்து டிரைவரிடம் முருகம்மா கேட்டபோது காத்திருக்கங்கள் இல்லையேல் இறங்கி செல்லுங்கள் என ஒருமையில் பேசி உள்ளார். இதனால் டிரைவருக்கும் தம்பதியிருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் முருகம்மா மற்றும் அவரது கணவர் செந்தில் மீது அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சரமாரியாக தாக்கினர். இதில், டிரைவர்-கண்டக்டர் தாக்கியதில் பெண் பயணியான முருகம்மா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட பொது மக்கள் பஸ் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்ததினால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் தொடர்ந்து பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் பயணிகளை அலைகழிப்பதாகவும், பேருந்தை தாமதமாக எடுப்பதாகவும், பயணிகளிடையே அதிகார தோரணையில் பேசுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்

Next Story