100 அடி கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு


100 அடி கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 2 Feb 2022 11:54 AM IST (Updated: 2 Feb 2022 11:54 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே 100 அடி கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

திண்டுக்கல் 

நிலக்கோட்டை கொக்குபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி பாப்பா(வயது60). இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்துக்கு சென்ற போது கால் தவறி அருகே இருந்த 100 அடி கிணற்றுக்குள் விழுந்து உள்ளார்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்க விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மூதாட்டி பாப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.  


Next Story