கொலை செய்து வயல்வெளியில் புதைக்கப்பட்ட பெண் - பட்டுக்கோட்டையில் பரபரப்பு


கொலை செய்து வயல்வெளியில் புதைக்கப்பட்ட பெண் - பட்டுக்கோட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Feb 2022 12:02 PM IST (Updated: 2 Feb 2022 12:02 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் பெண் கொலை செய்யப்பட்டு வயலில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தின் வயல் பகுதியில் ஒரு உடல் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு கொடுத்த தகவலின் போரில் பட்டுக்கோட்டை காவல் நிலைய இன்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், புதைக்கப்பட்டிருந்த பெண் பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோவின் மனைவி அன்னபூரணி (52) என்பது தெரியவந்தது.

அன்னபூரணி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். குடும்பத்தினர் அவரைத் தேடி வந்ததுள்ளனர். 

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அன்னபூரணியை அவர் அணிந்திருந்த நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story