புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் நாளை திறப்பு வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
புதுவையில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிர மாகநடைபெற்று வருகிறது.
புதுச்சேரி
புதுவையில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிர மாகநடைபெற்று வருகிறது.
பள்ளிகள் திறப்பு
புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த மாதம் 10-ந்தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் 10-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18-ந்தேதி முதல் மூடப்பட்டன.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்தது.
சுத்தம் செய்யும் பணி
இதன்படி புதுவையில் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story