மின்துறை தனியார் மயமாக்கலை எதிர்த்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அல்வா கொடுத்து நூதன போராட்டம்
மின்துறை தனியார் மயமாக்கலை எதிர்த்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ‘அல்வா’ கொடுத்து நூதன போராட்டம்
புதுச்சேரி
புதுவை மின்துறையை தனியார்மயத்தை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காமராஜர் சிலை அருகே போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு சிக்னலில் நின்ற பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதனமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த போராட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் சஞ்சய் முன்னிலை வகித்தார். பிரதேச செயலாளர் ஆனந்த் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் நிர்வாகிகள் ரஞ்சித், பிரதாப், நவீன், நிலவழகன், கவுசிகன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.யு.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார், சூசி கம்யூனிஸ்டு செயலாளர் லெனின்துரை, தொழிற்சங்க நிர்வாகிகள் முத்து, சண்முகம், லட்சுமணன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாகவும், தனியார் மயத்துக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story