இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு ரங்கசாமி கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் சிறைபிடிப்பு
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 31-ந்தேதி சிறைபிடித்தனர். மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களில் காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த வளர்செல்வம் (24), எழிலன் (26), பிரகலாதன் (17), விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பன்னீர் (42), சீர்காழி அர்ஜூன் (34), விக்ரம் (17), நாகப்பட்டினம் பரதன் (23), அருள்ராஜ் (22), மயிலாடுதுறை சந்திரன் (50) ஆகியோர் ஆவர்.
ரங்கசாமி கடிதம்
அவர்களை விடுவிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மீனவர்களின் குடும்பத்தினர் தமிழகம், புதுச்சேரி அரசுகளை வலியுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Related Tags :
Next Story